புதுக்கோட்டை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் சரிபார்ப்பு.!எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்களில் 80 சதவீதமும், வருகைப்பதிவில் 20 சதவீதமும் என கணக்கிட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளில் இருந்து எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் சேகரிக்கப்பட்டன. அதில் உள்ள மதிப்பெண்களை சரிபார்க்கும் பணி தற்போது நடந்து வருகிறது. 

பள்ளிகளில் இருந்து கொடுக்கப்பட்ட பட்டியலிலும், விடைத்தாளிலும் உள்ள மதிப்பெண்கள் சரியாக உள்ளதா? என ஆசிரியர்கள் கொண்ட குழுவினர் சரிபார்த்து வருகின்றனர். 

இந்த பணி ஓரிரு நாட்களில் முடி வடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பின் கணினியில் பதிவேற்றும் பணி நடைபெறும் என்றனர். இதே போல பிளஸ்-1 வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் கள் சரிபார்ப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments