புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவையாற்றியவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்.!ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் மாற்றுத்திற னாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள், நிறுவனங்களுக்கு தமிழக அரசால் விருதுகள் வழங்கப் பட்டு வருகிறது.


அதன்படி 2020-ம் ஆண்டுக்கான விருதுகள் 15.08.2020 அன்று சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்திற்கு 10 கிராம் தங்கப்பதக்கம், ரூ.50,000 மற்றும் சான்றிதழும், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவருக்கு 10 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. 

இதே போல மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிக அளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனத்திற்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும், மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறப்பு சமூகப்பணியாளருக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும், சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு 10 கிராம் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படவுள்ளதால் மேற்குறிப்பிட்டுள்ள விருதுக்கான விண்ணப்பங்களை வருகிற 27-ந் தேதிக்குள் புதுக் கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் வருகிற 27-ந் தேதிக்குள் பெற்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments