அரசு அதிகாரியை செருப்பால் அடித்த பாஜக பிரபலம் கைது.!அரசு அதிகாரியை செருப்பால் அடித்த டிக்டாக் பிரபலமும், பாஜக தலைவருமான சோனாலி போகத், கைது செய்யப்பட்டுள்ளர்.


அரியானாவில் டிக்டாக் மூலம் பிரபலமாகி பாஜ.வில் சேர்ந்தவர் சோனாலி போகத். இவர் கடந்த ஆண்டு நடந்த மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜ சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

இவர் அரசு அதிகாரியை பொது இடத்தில் செருப்பால் சரமாரியாக அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த வீடியோவை பகிர்ந்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘‘கட்டார் அரசில் பாஜ தலைவர்களின் லட்சணத்தை பாருங்கள். அரசு நடவடிக்கை எடுக்குமா?’’ என கேள்வி எழுப்பினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி சோனாலி மீது போலீசில் புகார் அளித்தார். இதனை அடுத்து புதன்கிழமை சோனாலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments