இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை – புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை.!



அனைத்து விதமான கடன் மீள செலுத்தும் தவணை தள்ளிவைப்பு காலம் ஆகஸ்ட் 31வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து விதமான கடன் மீள செலுத்தும் தவணை தள்ளிவைப்பு காலம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது:- 

கோவிட்-19 கொரோனா வைரஸ் தொற்று நோய் இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 27.03.2020 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூட்டுறவு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், சிறுநிதி வங்கிகள் மற்றும் உள்ளூர் பகுதி வங்கிகள் உட்பட அனைத்து வணிக வங்கிகள், நிறுவனங்கள், அனைத்து இந்திய நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள், வீட்டுவசதி நிதி நிறுவனங்கள் உட்பட கடன் வழங்கும் நிறுவனங்கள், வேளாண் கடன்கள், சில்லரை மற்றும் பயிர்கள் கடன்கள் உட்பட அனைத்து விதமான கடன்களையும் மார்ச் 01 முதல் மே 31க்கு இடையில் வரவிருக்கும் அனைத்து கடன் மீள செலுத்தும் தவணைகளை தள்ளிவைத்து வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளது.

இந்நிலையில் இக்கடன் தவணை தள்ளிவைப்பு காலம் ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள தொகையின் மீது வட்டி கணக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கைக்கு மாறாக கடன்தாரர்கள் தவணைத் தொகையை செலுத்திட வங்கிகள், நிறுவனங்கள் சார்பில் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வரப்பெறுகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிக்கைக்கு மாறாக செயல்படும் வங்கிகள், நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments