“கொரோனா வைரஸின் தாக்கத்தால் மூன்று நாட்கள் மிகவும் கடினமாக உணர்ந்தேன். தயவு செய்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என்று பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாஹித் அஃப்ரிடி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள ஷாஹித் அஃப்ரிடி மீது பரவிய வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நான் உணவின்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ என் குழுவுடன் உதவி செய்து வந்தபோதே என்னையும் கொரோனா தாக்கும் என்று தெரியும்.
ஆரம்பம் முதலே என் குடும்பத்தினரிடமிருந்து என்னை தனிமைப் படுத்தியே இருந்தேன். என் குழந்தைகளை முத்தமிடவில்லை. ஆக நான் நினைத்தது போலவே என்னை கொரோனா தாக்கியது.
கொரோனா பாதித்து முதல் மூன்று நாட்கள் மிகவும் கடினமானவை, அதனை நான் உணர்ந்தேன். தற்போது என் உடல் நிலையில் முன்னேற்றம் உள்ளது. நான் நலமாக உள்ளேன். என் மீது வதந்தி பரவி வரும் நிலையில் இந்த வீடியோவை விட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
நீங்களும் உங்களையும் உங்களை சார்ந்தவர்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள். உங்களின் செயல்பாடுகளிலேயே உங்களுக்கு அது வராமல் தடுக்க முடியும்.
நான் நலம் பெற வேண்டும் என பிரர்த்திப்பதாக தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் உள்ளிட்ட வீரர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.