சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து மீமிசலில் செல்போன் கடைகள் அடைப்பு.!தூத்துக்குடி மாவட்டம்,சாத்தான்குளத்தில் மொபைல் கடை வைத்திருந்த தந்தை மகன் இருவரும் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் மர்மமான முறையில் உயிரழந்துள்ளனர்.


இதனை கண்டிக்கும் விதமாக தமிழகத்தில் உள்ள செல்போன் கடைகள் அனைத்தும் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு செல்போன் விற்பனையாளர் சங்கம் சார்பில் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன் ஒரு பகுதியாக இன்று 24.06.2020 புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலை மீமிசலில் உள்ள செல்போன் கடை உரிமையாளர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments