பொய்யாதநல்லூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி.! ஊர் எல்லைகள் சீல் வைப்பு.!பொய்யாதநல்லூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் ஊராட்சி பொய்யாதநல்லூர் கிராமத்தில் இன்று 24.06.2020 ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இதையடுத்து பொய்யாதநல்லூர் கிராமத்திற்கு 28 நாட்களுக்கு எவரும் உள்ளிருந்து வெளியே செல்லாத படியும் வெளி நபர்கள் யாரும் உள்ளே செல்லாத படியும் திருப்புனவாசல் கிராம நிர்வாக அலுவலர் (VAO) திரு.பொய்யாமொழி மற்றும் திருப்புனவாசல் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி மலர் நல்லதம்பி தலைமையில் தனிமைபடுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாகனம் மூலம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments