புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று வேகமா பரவி வருகிறது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோபாலப்பட்டிணத்தில் கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை சார்பில் மத்திய, மாநில அரசு பரிந்துரைத்துள்ள நோய் தடுப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய ஹோமியோபதி மருந்தான 'ஆர்செனிக்கம் ஆல்பம் 30C' என்ற மருந்தினை நாளை 26.06.2020 (வெள்ளிக்கிழமை) முதல் 28.06.2020 ஞாயிற்றுக்கிழமை வரை வீடு வீடாக சென்று வினியோகம் செய்யப்படும் என GPM மக்கள் மேடை கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கி மருந்தினை சரியான முறையில் உட்கொண்டு நோய் தொற்றில் இருந்து அனைவரும் பாதுகாத்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
உட்கொள்ளும் வழிமுறைகள்:
1) 4 உருண்டைகள் ( 30 size ) தினசரி காலை வெறும் வயிற்றில் 3 நாட்களுக்கு தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளவும்.
2) நாக்கில் வைத்து சுவைத்து சாப்பிடவும்.
3) அனைத்து வயதினர், கர்ப்பிணி பெண்கள் மற்றும் இதர நோய்களுக்கு வேறு மருத்துவதுறை மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தாலும் சாப்பிடலாம்.
4) மருந்துகளை கையில் தொடாமல் உபயோகிக்கவும்.
5) ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் இதே மருந்தை உபயோகிக்கவும்.
குறிப்பு: அரசின் அறிவுரைப்படி முகக்கவசம், சமூக இடைவெளி, கைகழுவுதல் மற்றும் சுகாதார அறிவுரைகளை அவசியம் பின்பற்றவும்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அரசு மருந்தகங்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள், பதிவு பெற்ற ஹோமியோபதி மருத்துவர்கள் மற்றும் மருந்து கடைகளை நாடவும் .
தகவல்:
ஆலோசனை குழு 5,
GPM மக்கள் மேடை,
கோபாலப்பட்டிணம்.
புதுக்கோட்டை மாவட்டம்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.