கோபாலப்பட்டிணத்தில் SDPI கட்சியின் 12-வது ஆண்டு துவக்கதின கொண்டாட்டம்.! (படங்கள்)SDPI கட்சியின் 12-ஆம் ஆண்டு துவக்கதினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் கோட்டைபட்டினம் கிளை சார்பாக இன்று 21.06.2020 கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் பொது மக்களுக்கு கபசுர குடிநீர், கொரோனா விழிப்புணர்வு நடைபெற்றது.


SDPI கட்சியின் 12-வது ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் சார்பாக மீமிசல் ஸ்டேட் பேங்க் அருகில் SDPI கட்சியின் கிளை தலைவர் முகம்மது ஹனிபா அவர்கள் கொடியேற்றி நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் போன்றவை சமூக இடைவெளியை பின்பற்றி வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில் SDPI கட்சியின் கிளை செயலாளர் சகோதரர். USA அசார், நெய்னா முகம்மது மற்றும் செயல்வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக  நண்பர்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல்: முஹமது ஹனிபா, SDPI கட்சி கிளை தலைவர், கோபாலப்பட்டிணம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments