'சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வர்றீங்களா.. உங்களை நாங்கள் வரவேற்கிறோம்... ஆனால்.?' வாட்ஸ்அப்பில் பரவும் அன்பு வேண்டுகோள்.!



'சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வர்றீங்களா.. உங்களை நாங்கள் வரவேற்கிறோம்... ஆனால்.?' வாட்ஸ்அப்பில் பரவும் அன்பு வேண்டுகோள்.


ஆனால்..

நீங்கள் ஊருக்குள் வருமுன் தயவுசெய்து மாவட்டம் அல்லது நகர் எல்லையில் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து அரசின் அனுமதியுடன் உங்களை நீங்களே தனிமைப்படுத்தி கொள்ள முன் வாருங்கள்.

உங்கள் பரிசோதனை முடிவுகள் 24 முதல் 48 மணி நேரத்தில் வந்து விடும். நெகட்டிவ் என்றால் சந்தோஷமாக நீங்கள் வீட்டிற்கு வந்து விடலாம். பாஸிட்டிவ் என்றால் உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படும்.

இதனை மீறி நீங்கள் குறுக்கு வழியில் ஊருக்குள் வந்து அதன் பின்னர் உங்களுக்கு பாஸிட்டிவ் என தெரிய வந்தால் பாதிப்பு உங்களுக்கு மட்டுமல்ல. நீங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள அனைவரும் பாதிக்கப்படுவார்கள்.

எனவே சென்னையில் சோதனை செய்து விட்டு சொந்த ஊருக்குள் வாருங்கள்.இல்லையெனில் எல்லையில் தங்கி சோதனை முடிவு தெரிந்த பின்னர் ஊருக்குள் வாருங்கள்.

இதுதான் நீங்கள் பிறந்த மண்ணிற்கும் சொந்தங்களுக்கும் செய்யும் உதவி... அன்பு நண்பர்களே தாங்கள் இயன்றவரை இந்த செய்தியை அனைவருக்கும் பகிர்ந்திட வேண்டுகிறோம்", இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேண்டுகோள், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் இருந்து முறையான பரிசோதனை செய்யாமல் சொந்த ஊர் திரும்பியவர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments