புதுக்கோட்டையில் 30 சதவீதம் தெரிந்த சூரிய கிரகணம்.!




      புதுக்கோட்டையில் அறிவியல் இயக்க அலுவலக வளாகத்தில் சூரிய கிரகணத்தை பிரத்யேக கண்ணாடி மற்றும் தொலைநோக்கி கருவி மூலம் பார்வையிட்டவர்களை படத்தில் காணலாம்.

புதுக்கோட்டையில் சூரிய கிரகணம் 30 சதவீதம் தெரிந்தது. இதனை மக்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

பிரத்யேக கண்ணாடி

      சூரிய கிரகணம் நேற்று காலை 10.22 மணிக்கு தொடங்கி மதியம் 1.41 மணிக்கு முடிவடைந்தது. கொரோனா ஊரடங்கின் காரணமாக திறந்தவெளியில் நின்று பொதுமக்கள் சூரிய கிரகணத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்படவில்லை. புதுக்கோட்டையில் அறிவியல் இயக்கம் சார்பில் அதன் அலுவலக வளாகத்தில் சூரிய கிரகணத்தை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் சதாசிவம், செயலாளர் முத்துக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர்கள் மணவாளன், பிரபாகரன் மற்றும் பொதுமக்கள் சிலர் வந்திருந்தனர்.

    சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது என்பதால், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடியால் ஆர்வமுடன் பார்த்தனர். அப்போது சூரியனை நிலவு மறைக்கும் கிரகணம் தெரிந்தது. மேலும் பிரத்யேக தொலைநோக்கு கருவி மூலமும் சூரியகிரகணத்தை பார்வையிட்டனர். சூரிய கிரகணத்தின் போது ஒரு சில இடங்களில் தாம்பூல தட்டில் உலக்கையை செங்குத்தாக பொதுமக்கள் நிற்க வைத்திருந்தனர். அப்போது உலக்கை சரிந்து கீழே விழாமல் நின்றதை ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்தனர்.

இதேபோல் குடியிருப்பு பகுதியில் சிறுவர், சிறுமிகளுக்கு பிரத்யேக கண்ணாடிகளை அறிவியல் இயக்க மாநில பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் வழங்கி, சூரிய கிரகணத்தை காணச்செய்தார். அவர்களுக்கு தின்பண்டங்களும் வழங்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments