7 வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொடூர கொலை... 27 வயது இளைஞன் கைது!!ஆவுடையார்கோவில் அருகே ஏம்பலில் 7 வயது சிறுமி ஊரணிக்குள் மூழ்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா ஏம்பலைச் சேர்ந்த நாகூரான் செல்வி தம்பதியினர் மகள் ஜெயப்பிரியா. 7 வயதான சிறுமி. இவர் நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து காணவில்லை. அவரை பெற்றோர், உறவினர்கள், அக்கம்பத்தினர் போலீஸார் எனப் பலரும் நேற்று மதியம் முதல் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். பல இடங்களில் சல்லடை போட்டு தேடியும் சிறுமி ஜெயப்பிரியாவை காணவில்லை.

இந்நிலையில் நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறுமியின் வீட்டிற்கு அருகில் உள்ள ஊரணியில் சிறுமி ஜெயப்பிரியா சடலமாக கிடந்துள்ளார், சிறுமியின் சடலத்தை கைப்பற்றி ஏம்பல் போலீஸார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணையை முடுக்கிவிட்டு தீவிரமாக விசாரணை மேற்க்கொண்டு வந்தனர். 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து விசாரணை மேற்க்கொண்டார். அதில் 27 வயது இளைஞரான ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரித்ததில் அவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார் அவரை கைது செய்த போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

7 வயது சிறுமியின் பாலியல் மரணம் ஏம்பல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments