புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவர்கள் தின கொண்டாட்டம்.!



புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் டாக்டர்கள் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.


நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் பேசுகையில் ‘தான் ஒரு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என்பதைவிட மருத்துவர் என்பதில் தான் அதிகப் பெருமை அடைகிறேன்’ என்றும், காவல்துறையில் கண்ணுக்குத் தெரிந்த எதிரிகளை தண்டித்து சிறையில் அடைக்கலாம், 

ஆனால் மருத்துவர்கள் கண்ணுக்குத் தெரியாத வைரஸோடு போராடிக்கொண்டிருக்கிறார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி சேவை செய்யும் மருத்துவர்களுக்கு மருத்துவ தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று குறிப்பிட்டார்.

தலைமை வகித்து பேசிய மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் இந்த மருத்துவர்கள் தினத்தில் மருத்துவம் படித்த காவல்துறை கண்காணிப்பாளர் இருப்பது பெருமை என்றும், புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மட்டும்தான் கொரோனா மட்டுமல்லாது மற்ற சேவைகளையும் தொடர்ந்து செய்கிறது. மருத்துவ சேவையில் முன்னணியில் இருக்கிறது’’ என்றும் குறிப்பிட்டார்.

பிறகு கோவிட் மருத்துவமனையில் பணிபுரிந்த முன்னிலை வீரர்களான 41 மருத்துவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நீர்ப்பழனி ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த அரசப்பிரியா என்பவருக்கு சிறந்த சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் இந்திய மருத்துவக் கழகத்தின் புதுக்கோட்டை கிளை தலைவர் சலீம், செயலாளர் நவரத்தினசாமி, புதுக்கோட்டை மயக்க மருத்துவர்கள் சங்க செயலாளர் பெரியசாமி, துணை முதல்வர் சுஜாதா, துணை கண்காணிப்பாளர் வசந்த ராமன், நிலைய மருத்துவ அலுவலர் இந்திராணி உட்பட மருத்துவப் பேராசிரியர்கள் அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments