கிருஷ்ணாஜிப்பட்டினத்தில் புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா.!புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்குட்பட்ட கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று 01.07.2020 புதன்கிழமை நடைபெற்றது.


சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சிக்கு புதிய ஊராட்சி மன்ற கட்டிடம் கட்ட கிருஷ்ணாஜிபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. MLS சாகுல்ஹமீது அவர்களின் முயற்சியால் பணி கோரப்பட்டு மதிப்புமிகு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அனுமதிப்படி புதிய ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்ட இன்று அடிக்கல் நாட்டும்விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில் ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments