கல்விக்காக உதவி – SYPA அறிவிப்பு.!கலை அறிவியலில் உயர் கல்வி படிக்க உதவி செய்யும் திட்டத்தினை திறமையுள்ள தொழில்முறை இளையோர் ( Skilled Youth Professional) அமைப்பு தெரிவித்துள்ளது.


பெற்றோர் இல்லாதவர்கள்/ கிராமப்புறத்தை சேர்ந்த தந்தையை இழந்தவர்கள் /மாற்றுத்திறனாளிகள்/  சிறைவாசிகளின் பிள்ளைகள்/ உலமாக்களின் பிள்ளைகள்/ கொரானா ஊரடங்கால் முமு வாழ்வாதாரம் இழந்தவர்கள் ஆகியோர் இந்த திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

இந்த உதவிக்கு தகுதி பெற +2 வில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

BA / BSC / B.Com போன்ற கலை அறிவியல் படிப்புடன் வேலை வாய்ப்புக்கான பயிற்சியும் இந்த திட்டத்தில் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் 50 மாணவர்களுக்கு மூன்று ஆண்டு கல்விக்கான முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளப்படும்.

இந்த உதவிக்கு தகுதி பெற்றவர்கள் SYPA பரிந்துரை செய்யும் கல்லூரியில் மூன்று ஆண்டும் நேரடி கண்காணிப்பில் படிக்க வேண்டும்

விண்ணப்பிப்பதற்கான இறுதி தேதி: 15, ஜூலை 2020 ஆகும்

இது சம்பந்தமாக மேலதிக தொடர்புக்கு இந்த அமைப்பின்
நிறுவனர் முகம்மது ரபிக்கை 9791475700, 7401 408 408 , 75022 43467 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments