மஜகவின்_முன்முயற்சியால் குவைத்வாழ்தமிழர்கள்தனிவிமானம்மூலம்தாயகம்_வருகை!கொரோனா இடையூறுகளால் தாயகம் செல்ல விமானம் இன்றி தவித்த குவைத் வாழ் தமிழர்களின் தொடர் கோரிக்கையை அடுத்து மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் ஆலோசனையின் பேரில் மஜகவின் அயல்நாட்டு பிரிவாம் குவைத் மண்டல மனிதநேய கலாச்சார பேரவையின் சார்பாக 'Jazeera Airways' மூலம் விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த  (24/06/2020) அதிகாலை 2:25 க்கு மணிக்கு குவைத்திலிருந்து புறப்பட்டு காலை 10:00 மணிக்கு திருச்சி விமானநிலையம் வந்தடைந்தது.


தாயகம் வருகை தந்த பயணிகள் அனைவரையும் திருச்சி மஜகவினர் சார்பாக வரவேற்று அவர்கள் தனிமைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

இப்பணிகளை குவைத் மண்டல செயலாளர் நீடூர் நபீஸ், சையது, மைதீன் உள்ளிட்டவர்கள் முன்னெடுத்து செய்தனர்.

தகவல் ;
#மனிதநேயகலாச்சாரபேரவை
#MKP_IT_WING
#குவைத்_மண்டலம்.
60338005 - 99739696 - 65510446
-----
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments