எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க?: புதுக்கோட்டை சம்பவம் தொடர்பாக ஹர்பஜன் வேதனை ட்வீட்!

சென்னை: எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க? என்று புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டம், ஏம்பல் கிராமத்திலிருந்து, 30.6.2020 முதல் காணாமல் போன சிறுமி, காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த நிலையில், 1.7.2020 அன்று மாலை வண்ணாங்குளம் என்ற ஊரணியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த பூ வியாபாரி ராஜா(27) என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க? என்று இந்த சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல..அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா. #JusticeforJayapriya 

இவ்வாறு அவர் ட்வீட் செய்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments