சவுதி அரேபியாவில் மார்சு மாதத்தில் இறந்த சகோதரர் கந்தன் உடலை தாயகம் அனுப்பிய ரியாத் மண்டல தமுமுகவின் மனிதநேய பணி

தமிழகத்தை சேர்ந்த பெரம்பலூர் மாவட்டம் வேடந்தட்டை தாலுகா அன்னமங்கலம் அருகில் அரசலூர் கிராமத்தை சேர்ந்த சென்னன் மகன் கந்தன்அவர்கள் KANOOZ contracting co.என்ற தனியார் கம்பெனியில் பணியாற்றி வந்துள்ளார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த மார்சு-23 ஆம்தேதி (23-03-2020) அன்று சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அவருக்கு மல்லிகா என்ற மனைவியும்,தீபா,அம்சவள்ளி என்ற 2 மகள்களும்,சங்கர்,கண்ணன் என்ற 2 மகன்களும் உள்ளார்கள்.

இச்செய்தியை அறிந்த உறவினர்கள் செய்வதறியாத நிலையில் மாநில தமுமுக செயலாளர் பேரா.ஹாஜாகனி அவர்களைத் தொடர்பு கொண்டு தாயகத்திற்கு உடலை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையின் அடிப்படையில் தகவலைப்பெற்ற ரியாத் மண்டல சமூக நலத்துறை செயலாளர் அப்துல்ஹமீது அவர்கள் ரியாத் மத்திய மண்டல தமுமுக-மமக தலைவர் மீமிசல் நூர்முகம்மது அவர்களின் வழிகாட்டுதலின்படி கந்தன் பணியாற்றிய கம்பெனியுடன் இனைந்து மருத்துவமனையிலிருந்து உடலை வாங்க தேவையான ஆவணங்களை தயார் செய்தார்

விரைந்து செயல்பட்டாலும் கம்பெனியிலிருந்து பெறவேண்டிய தொகை மற்றும் உடலை அனுப்புவதற்கான தொகைக்கான கையொப்பமிடலில் தாமதம் ஏற்பட்டது.
கம்பெனி முதலாளியை நேரில் சந்தித்து பிரச்சினைகளை தெளிவாக்கி கையொப்பம் பெற்று,
உரிய ஆவணங்களை இந்திய தூதரக ஒத்துழைப்புடன் மருத்துவமனையில் ஒப்படைத்து கந்தன் உடல் பெற்று கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 30-06-2020 வியாழக்கிழமை மாலை எமிரேட்ஸ் விமானம் மூலமாக கந்தன் உடல் சென்னை விமான நிலையம் 01-07-2020 மாலை 4:40 மணிக்கு சென்னை விமானநிலையம் சென்றடைந்தது.
பெரம்பலூர் மாவட்ட தமுமுக மாவட்ட செயலாளர் ஹுதுரத்துல்லா ஆலோசனையின்படி தமுமுக ஆம்புலன்ஸில் மமக துணை செயலாளர் ஹயாத் பாஷா மற்றும் ஓட்டுனர் சதாம்உசேன் மற்றும் இறந்த கந்தனின் மகன் சங்கர் ஆகியோர் விமான நிலையம் சென்றனர். மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப் அவர்களின் வழிகாட்டுதலில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் S K ஜாஹிர் உசேன்

மற்றும் ஆஷிக் ஜமால் SS. அப்துல் ரஹ்மான் ரியாஸ் அப்துல் முனாஃப் ஷாஜஹான் பஹாத் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட நிர்வாகிகள் அடங்கிய தாயகம் திரும்பும் தமிழர் உதவி குழுவினர் விமான நிலையத்தில் இறந்த கந்தனின் உடலைப்பெற்று

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் அவரது சொந்த ஊருக்கு எடுத்துச்சென்று அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர் மேலும் இறந்த உடலை இடுகாடு வரை எடுத்து சென்று உடனிருந்து உதவி செய்தனர்.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments