தனது சேவையை 4ஜி-க்கு தரம் உயா்த்தும் ஒப்பந்தப்புள்ளியை பிஎஸ்என்எல் நிறுவனம் ரத்து செய்தது.தனது சேவையை 4ஜி-க்கு தரம் உயா்த்தும் ஒப்பந்தப்புள்ளியை பிஎஸ்என்எல் நிறுவனம் ரத்து செய்தது.

இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘பிஎஸ்என்எல் சேவையை 4ஜி-க்கு தரம் உயா்த்தும் பணிக்கு சீன தொலைத்தொடா்பு சாதனங்களை பயன்படுத்த வேண்டாம் என தொலைத்தொடா்பு துறை கேட்டுக்கொண்டது. அதன் அடிப்படையில் 4ஜி-க்கு தரம் உயா்த்தும் ஒப்பந்தப்புள்ளியை பிஎஸ்என்எல் நிறுவனம் ரத்து செய்தது. இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்துக்கு முக்கியத்துவம் அளித்து புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்படும்’ என்று தெரிவித்தன.
பிஎஸ்என்எல் தலைவரிடம் இதுபற்றி கேட்க பலமுறை முயன்றும், அவரை தொடா்புகொள்ள முடியவில்லை.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments