புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் கவனத்திற்கு..! ரூ.1000 நிவாரணத்தொகை கிடைக்கவில்லையா.? புகார் தெரிவிக்க தொலைபேசி எண்.!



மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசின் ரூ.1000 நிவாரணத்தொகையை பயனாளியின் இருப்பிடத்திற்கே நேரில் சென்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி, புதுக்கோட்டை போஸ் நகரில் உள்ள மாற்றுத்திறனாளியின் வீட்டிற்கு நேரில் சென்று நிவாரண தொகை வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றுள்ள 29 ஆயிரத்து 520 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1000 நிவாரண தொகையை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த நிவாரணத்தொகை பெறுவதில் சிரமம் ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்ட புதுக்கோட்டை மாவட்ட 

மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்- 8838932759, அல்லது முடநீக்கு வல்லுனர்- 9488494679, அல்லது செயல்திறன் உதவியாளர்- 9788185873 ஆகிய செல்போன் எண்களிலோ, அல்லது 04322-223678 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேலும் உதவி மறுக்கப்படும் அல்லது கிடைக்கப்பெறவில்லை எனில் மாநில மையத்தின் 18004250111 என்ற எண்ணிலும், பேச்சுத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு வாட்ஸ்-அப் மற்றும் வீடியோகாலிங் கொண்ட wa.me/919700799993 என்ற செல்போன் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என்று கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, தாசில்தார் முருகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments