புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு.! கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் இன்று முதல் மாற்றம்.!



நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டு மாலை 5 மணி வரை செயல்படும் என்று வர்த்தகர்கள் அறிவித்துள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் முன்பை விட தற்போது இரு மடங்காக அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு தளர்வுடன் அமலில் இருந்தாலும் இந்த மாதத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) புதுக்கோட்டை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமலாகிறது. 

இந்த நிலையில் மாவட்ட வர்த்தக கழகத்தினர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி கடைகள் திறந்திருக்கும் நேரத்தில் மாற்றம் செய்ய முடிவு செய்து அறிவித்துள்ளனர். அதன்படி மளிகை போன்ற அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 31-ந் தேதி வரை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட வேண்டும். மற்ற வணிக நிறுவனங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். 

உணவகங்கள், மருந்து கடைகள் ஆகியவை அரசு அறிவித்துள்ளப்படி செயல்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப் பிடிக்கப்படும் என்று மாவட்ட வர்த்தக கழகத்தின் தலைவர் சாகுல்அமீது, செயலாளர் சவரிமுத்து ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் நகைக் கடைகள் அனைத்தும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று புதுக்கோட்டை மாவட்ட தங்கம், வைரம் மற்றும் வெள்ளி நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் வி.இ.எஸ்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். 

மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் ஏற்கனவே கடை திறப்பு நேரத்தை குறைத்து மதியம் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments