கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதல் முறையாக தரையிறங்கிய ராயல் புருனே விமானம்!



புருனேயில் இருந்து வந்த ராயல் புருனே விமானம் கோவை சர்வதேச விமான நிலையத்தில் முதல் முறையாக தரையிறங்கியது.


புருனேயில் இருந்து வந்த இந்த விமானத்தில் மொத்தம் 139 இந்தியர்கள் பயணம் செய்தனர். இதில் ஆண்கள் 101 பேரும், பெண்கள் 31 பேரும், குழந்தைகள் 7 பேரும் என மொத்தம் 139 பேர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கோவை வந்தடைந்தனர். முன்னதாக ராயல் புருனே ஏர்லைன்ஸ் கடந்த 2004-2005 காலகட்டத்தில் இந்தியாவில் புருனே-கொல்கத்தா-துபாய் இடையே இயக்கப்பட்டது. 

கோவை சர்வதேச விமான நிலையத்தில் துபாய் மற்றும் பிற நாடுகளிலிருந்து சர்வதேச விமானங்கள் இதுவரை தரையிறங்கியுள்ள நிலையில், தற்போது முதல் முறையாக ராயல் புருனே ஏர்லைன்ஸ் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இது தொடர்பாக விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், ராயல் புருனே ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை 11:55 மணிக்கு கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக தெரிவித்தார்.

இந்த விமானத்தில் புருனேயில் இருந்து மொத்தம் 139 இந்தியர்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ததாக கூறினார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விமான சேவை முடக்கப்பட்ட நிலையில் அந்தந்த நாடுகளில் தவித்து வரும் தங்கள் நாட்டு மக்களை அழைத்து வர இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் சிறப்பு விமானங்கள் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments