கோபாலப்பட்டிணம் தமுமுக கிளை சார்பில் இரத்ததான முகாம்.!புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகாமையிலுள்ள கோபாலப்பட்டிணத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் கோபாலபட்டிணம் கிளை சார்பாக மாபெரும் இரத்ததான முகாம் கோபாலப்பட்டிணம் அக்ஸா தெரு பிரதான சாலையில் நீயு பாப்புலர் பள்ளியில் (மத்தீன் சார் பள்ளி) 04-07-2020 சனிக்கிழமை நடைபெற்றது.


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையும் இணைந்து மாபெரும் இரத்ததான முகாம் தமுமுக கிளை தலைவர் முகமது மசூது தலைமையில் நடைபெற்றது. 

முகாமை மருத்துவர் P.கணேசன் MBBS., மற்றும்  மாவட்ட  பொருளாளர் அஜ்மல் கான் துவங்கி வைத்தனர்.

 இம்முகாமில் 35 நபர்கள் இரத்த தானம் வழங்கினார்கள்.

இரத்ததானம் செய்தவர்களுக்கு அறந்தாங்கி இரத்த வங்கி குழுத்தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சான்றிதழ் வழங்கினார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கோபாலப்பட்டிணம் கிளையை பாராட்டி சான்றிதழ் வழங்கபட்டது. 

இம்முகாமில் பொன்பேத்தி வட்டார மருத்துவ அலுவலர் ராமச்சந்திரதுரை, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சேக் தாவுதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் கலந்தர் பாட்சா, மாவட்ட மாணவரணி பொருளாளர் முபாரக், ஒன்றிய பொருளாளர் ஊராட்சி மன்ற உறுப்பினர் அபுதாஹிர், நாட்டாணி புரசக்குடி ஊராட்சி மன்றத் தலைவர் சீதா லட்சுமி,கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள், கோபாலப்பட்டிணம் GPM மக்கள் மேடை உறுப்பினர்கள், GPM பொதுநல சேவை சங்கம் உறுப்பினர்கள், காவல் துறை அதிகாரிகள், மருத்துவ துறை அதிகாரிகள், தமுமுக கிளை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இரத்ததான கொடையாளர்கள் கலந்து கொண்டனர். 

இறுதியில் மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் அசாருதீன் நன்றி கூறினார்.

தகவல்:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மருத்துவ சேவை அணி
கோபாலப்பட்டிணம் கிளை 
ஆவுடையார்கோவில் ஒன்றியம் 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் 
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments