"ஸ்டிரிக்ட்" ஆலங்குடி விஏஓ.! தடைபட்ட வசூல்.. தலையாரிகள் அவதூறு.. தற்கொலைக்கு முயன்ற விஏஓ!



புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிராம நிர்வாக அலுவலகத்தில் இடைத்தரகர்களை தடுத்ததால் கீழ் பணியாற்றும் ஊழியர்கள் அவதூறு பரப்புவதாக கூறி பெண் வி.ஏ.ஓ. தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தற்கொலைக்கு முயன்ற கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி என்பவராவார். இவர் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டு தற்கொலை செய்துகொள்ள போவதாகவும், அதற்கு தனக்கு கீழ் பணிபுரியும் சங்கர், ரவி ஆகியோரே காரணம் என்றும் கடிதம் எழுதி சமூக வலைத்தளம் மூலம் பலருக்கும் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி, கலைச்செல்வியின் வீட்டிற்கு சென்று அவரை மீட்டு ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கலைச்செல்வி எழுதிய கடிதத்தை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கலைச்செல்வி எழுதிய கடிதத்தில் தனக்கு கீழ் பணிபுரியும் தலையாரிகள் சங்கர், ரவி ஆகியோர் தன்னை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாக கூறியுள்ளார்.

இடைத்தரகர்கள் யாரையும் அலுவலகத்திற்குள் விடாமல் பொதுமக்களுக்கு தேவையான பணிகளை உடனே முடித்துக் கொடுத்து விடுவதால் சங்கர், ரவி இருவருக்கும் பணம் கிடைக்கவில்லை என்பதால் தம்மை பற்றி அவதூறாக பலரிடம் கூறி வருகின்றனர் என்று கலைச்செல்வி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments