ஏம்பலில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலையான சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம்.. காவல்துறையினர் வேண்டுகோள்.!ஆவுடையார்கோவில் அருகே ஏம்பல் கிராமத்தை சேர்ந்த 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்டாள். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். சிறுமி கொலை சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் இந்த சம்பவத்தை கண்டித்து, இது போன்ற சம்பவம் இனியும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். சிறுமி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிரபலங்களும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த புகைப்படத்தை முகநூல், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இந்த சம்பவத்திற்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம் என்று மாவட்ட காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இது குறித்து போலீசார் கூறுகையில், “பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது சட்டப்படி குற்றமாகும். ஆகவே பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர வேண்டாம்” என்றனர்.

இதற்கிடையே புதுக்கோட்டை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தில் இருந்து நேற்று முன்தினம் சிறுமியின் உடல் ஆம்புலன்சில் ஏற்றப்பட்டு வெளியே வந்தபோது மறித்து போராட்டம் நடத்திய 3 பேர் மீது கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments