கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி சார்பாக கிருமி நாசினி தெளிப்பு.!கோபாலப்பட்டிணத்தில் ஊராட்சி சார்பாக கிருமி நாசினி தெளிப்பு பனி நடைபெற்றது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் காட்டுத்தீ போல் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

மேலும் மாவட்டம் நிர்வாகம் கொரோனா கிருமி மனிதர்களிடையே தொற்றாமல் இருக்க கிராம ஊராட்சி பகுதிகளில் நிர்வாகத்தின் சார்பில் கிருமி நாசினி தெளிப்பது, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை ஏற்படுத்த அந்தந்த ஊராட்சி நிர்வாகத்திடம் அறிவுருத்தி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி மீமிசல் அருகில் உள்ள கோபாலப்பட்டிணத்தில் இன்று 06.07.2020 திங்கள்கிழமை தூய்மை பணியாளர்கள் வாகனம் மூலம் கோபாலப்பட்டிணத்தில் சாலைகள், கட்டிடங்கள், வீடுகள் என பல இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பனி நடைபெற்றது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments