அறந்தாங்கி MJTS ஆட்டோ ஸ்டாண்டுக்கு நிரந்தர அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு.!



அறந்தாங்கி அக்னிபஜார்-புதுவயல் சாலையில் செயல்பட்டு வரும் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க MJTS ஆட்டோ ஸ்டாண்டுக்கு நிரந்தர இடம் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


அறந்தாங்கி அக்னிபஜார்-புதுவயல் சாலையில் செயல்பட்டு வரும் மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க MJTS ஆட்டோ ஸ்டாண்டுக்கு நிரந்தர இடம் கோரி இன்று 06.07.2020 அறந்தாங்கி நகர தலைவர் சோலைமலை தலைமையில் தொழிற்சங்க உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இந்நிகழ்வில் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முகம்மது சுல்தான், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில துணைச் செயலாளர் துரை முகம்மது, கிழக்கு மாவட்ட செயலாளர் முனைவர் முபாரக் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: ஆட்டோ ஸ்டாண்ட் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் கையொப்பம். MJTS மாநில அங்கிகார சான்றிதழ். ஆட்டோ ஸ்டாண்ட் பெயர் பலகை. ஆட்டோ ஸ்டாண்ட் துவக்க நிகழ்ச்சி பற்றிய பத்திரிக்கை செய்தி. ஆட்டோ ஸ்டாண்ட் இடம் (கோட்டாட்சியர், வட்டாச்சியர், காவல் ஆய்வாளர்) அனுமதி கோரும் மனுக்கள்.

இந்த மனுவில் கையொப்பம் இட்டுள்ள நாங்கள் அனைவரும் அறந்தாங்கி மண்டிக்குளம் மற்றும் மணிவிளான் பகுதியில் வசித்து வருகிறோம். நாங்கள் எங்கள் குடும்ப வாழ்வாதாரத்திற்கு ஆட்டோ ஓட்டிவருகிறோம். நாங்கள் இதுவரை எந்த ஆட்டோ சங்கத்திலும் ஆட்டோ ஸ்டாண்டுகளிலும் உறுப்பினர்களாக இல்லை. அதனால் தொழிலாளர்களுக்கு கிடைக்கவேண்டிய அங்கிகாரங்களும், உரிமைகளும், நிவாரணங்களும் எங்களுக்கு கிடைப்பதில்லை.

தற்போது நாங்கள் அனைவரும் தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக தொழிற்சங்க பதிவு 3594/CNÍ எண் கீழ் செயல்பட்டு வருகிறோம். எனவே மண்டிக்குளம் மற்றும் மணிவிளான் பகுதியில் உள்ள அக்னி பஜார் புதுவயல் சாலையில் M.R திருமண மண்டபத்திற்கு அருகில் பொதுமக்களுக்கும் போக்குவரதிற்கும் இடையூறு இல்லாத இடத்தில் ஒரு ஆட்டோ (நிலையம் ) ஸ்டாண்ட் அமைத்து செயல்பட்டு வருகிறோம். மேற்கண்ட இடத்திலோ அல்லது சமூகம் அவர்கள் குறிப்பிடும் இடத்திலோ நிரந்தர ஆட்டோ நிலையம் (ஸ்டாண்ட்) செயல்பட எங்களுக்கு அனுமதி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்துடன் எங்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அனைவருடைய பெயர், ஆட்டோ நம்பர் ஆகியவற்றுடன் கையொப்பம் இட்டு இணைத்துள்ளோம் என்று அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments