ஆவுடையார்கோவில் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம்.!ஆவுடையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள 35 ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், கூட்டமைப்பு சங்க ஒருங்கிணைப்பாளர்களாக 5 ஊராட்சி தலைவர்களும், பொருளாளர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் சிறுமருதூர் ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம், பூவலூர் ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி சரவணப்பெருமாள், புண்ணியவயல் ஊராட்சி தலைவர் சுரேஷ், பொன்பேத்தி ஊராட்சி தலைவர் உமையாள் பால்துரை, திருப்புனவாசல் ஊராட்சி தலைவர் மலர் நல்லதம்பி ஆகிய 5 பேரும் ஒருங்கிணைப்பாளர்களாகவும், பொருளாளர்களாக திருப்பெருந்துறை ஊராட்சி தலைவர் சந்திரா ராஜமாணிக்கம், அமரடக்கி ஊராட்சி தலைவர் கலையரசி ராஜா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments