புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் இலவச பொருட்கள் பெற ஜூலை 9 ஆம் தேதி வரை டோக்கன்கள் வழங்கப்படும்: கலெக்டர் அறிவிப்பு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் ஜூலை மாதத்திற்குரிய பொருட்கள் விலையில்லாமல் வழங்கப்பட உள்ளது.


கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அத்தியாவசிய பொருட்கள் பாதுகாப்பாக அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்துடன், வருகிற 9-ந் தேதி வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன்கள் வழங்கப்படும். 

அந்த டோக்கன்களில் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும். சம்பந்தப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள், அவரது டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் வருகிற 10-ந் தேதிக்கு பின்னர் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று அரிசி, சர்க்கரை, எண்ணெய் மற்றும் துவரம் பருப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்களை விலையின்றி பெற்றுக்கொள்ளலாம்.

ரேஷன் கடைகளுக்கு 10-ந் தேதி 2-வது வெள்ளிக்கிழமை பணி நாளாகும். அதற்கு ஈடான விடுமுறை பின்னர் அறிவிக்கப்படும். இந்த மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் முழு ஊரடங்கு என்பதால், அன்றைய தினம் ரேஷன் கடைகள் இயங்காது. 

மேலும் இது தொடர்பான புகார்கள் இருந்தால் புதுக்கோட்டை மாவட்ட வழங்கல் அலுவலரை 9445000311 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments