தஞ்சையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பிரபல மருத்துவர் மரணம் இறுதிசடங்கை நடத்திவைத்து_ இறுதிவரை களத்தில் நின்ற தஞ்சை தமுமுகதஞ்சையில்கொரோனாதொற்றால்பாதிக்கப்பட்டுபிரபலமருத்துவர்மரணம்இறுதிசடங்கைநடத்திவைத்து_இறுதிவரை களத்தில்நின்றதஞ்சைதமுமுக

கும்பகோணத்தைச் சேர்ந்த பிரபல மருத்துவர் விஷ்ணுப்பிரியா அவர்கள்
ஒரு வாரத்திற்கு முன்பாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நல குறைவால் அனுமதிக்கப்பட்டார் பிறகு பரிசோதனையில் அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் டாக்டர் விஷ்ணுபிரியா மருத்துவ மனையில் மரணமடைந்தார். உடனே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் தஞ்சை I.M. பாதுஷா அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  இறுதி சடங்கை நடத்தி தருமாறும் அவருடைய சொந்த ஊரான கும்பகோணத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாய் மருத்துவரின் மகன் டாக்டர் ஹரி பாஸ்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.  உடனே சம்பவ இடத்திற்கு தஞ்சை I.M.பாதுஷா தலைமையில் விரைந்து சென்ற தமுமுக சகோதரர்கள் தஞ்சை  மாநகரத் துணைச் செயலாளர்கள் முகம்மது ரசூல் மன்சூர் அலி , சதாம் உசேன்,  ரபீக்  
மற்றும் உறவுகள் அறக்கட்டையின் நிர்வாகி ஆலம் கான், மற்றும் தமுமுக நிர்வாகிகிள் இத்ரிஸ், அஹமது, ஷானு,   விரைந்து சென்று தமுமுகவின் தஞ்சை மாநகர ஆம்புலன்ஸை வரவழைத்து அவருக்கான இறுதி சடங்குக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

மருத்துவமனை ஊழியர்கள் மருத்துவமனையில் மரணித்த மருத்துவரின் உடலுக்கு கெமிக்கல் வைக்க வேண்டும் என்ற கூடுதல் பொறுப்பையும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினுடைய நிர்வாகிகளுக்கு வழங்கினர் உடனடியாக சிறிதும் தாமதப்படுத்தாமல் தமுமுக தொண்டர்கள் மருத்துவமனையில் நுழைந்து பாதுகாப்பு கவசங்கள் உடன் உள்ளே சென்று இறுதி சடங்கிற்கான அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு பிரேதத்தை முறையாக பேக் செய்து தமுமுக (தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்) வினுடைய ஆம்புலன்சில் ஏற்றி அவருடைய சொந்த ஊரான கும்பகோணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கே தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் முஜிபு ரஹ்மான் அவர்களுக்கு தஞ்சை பாதுஷா மூலமாக தகவல் தெரிவிக்கப்பட்டு அவருடைய தலைமையில் அப்துல் ரஹ்மான் அல் ஜலால்,  ரஹமத்அலி, மற்றும் தயார் நிலையில் மயான நிலையத்தில் காத்திருந்தனர். தமுமுக வின் உடைய ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்பட்ட பிரேதம் தஞ்சை மாநகர மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகளால் இந்து முறைப்படி அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோளுக்கு இனங்க தகனம் செய்யப்பட்டது. இதை கண்டு கொண்டிருந்த மருத்துவர் விஷ்ணு பிரியாவின் குடும்பத்தினர்களாகிய  மருத்துவருடைய மகனார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி கூறி நன்றி கூறினர். 

 எல்லா புகழும் இறைவனுக்கே...

தகவல் 
ஊடகப்பிரிவு 
தமுமுக - மமக 
தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு மாவட்டம்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments