சூரிய மின்சக்தி வேலி அமைப்பதற்கு விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தகவல்





புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சூரிய மின்சக்தி உதவியுடன் இயங்கும் மின்வேலி 50 சதவீத மானியத்தில் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தினை விவசாயிகளுக்கு 2020-21 ஆம் ஆண்டில் செயல்படுத்திட மாண்புமிகு தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் அவர்களால் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது
வேளாண்மை உற்பத்தியினை பாதுகாத்திடவும் காட்டு விலங்கு இடமிருந்து பயிர் சேதத்தை தடுக்கும் 2020-21 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இருந்து சூரிய மின்சக்தி வேலி அமைப்பதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என அறிவித்துள்ளார் விருப்பமுள்ள புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் 9500588125 என்ற அலைபேசி எண் 04322 221816 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments