ஆவுடையார்கோவில் அருகே கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் காயம் அடைந்தனர்.
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பொன்காட்டில் இருந்து கைலாசம் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஆவுடையார்கோவில் அருகே உள்ள வீரமங்கலம் காமராஜ் நகருக்கு ஒரு காரில் வந்து கொண்டிருந்தார். காரை, கைலாசம் மகன் அன்புராஜ் ஓட்டினார்.
அறந்தாங்கியில் இருந்து வீரமங்கலம் செல்லும் வழியில் உள்ள வெள்ளாற்று பாலத்தின் அருகே கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு 10 அடி உயரத்தில் இருந்து கீழே பாய்ந்தது. இதில் அன்புராஜ், காரில் பயணம் செய்த கைலாசம், தனபாக்கியம், ஜெயந்தி ஆகியோர் காயம் அடைந்தனர்.
அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஆவுடையார்கோவில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.