புதுக்கோட்டை மாவட்டத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்படுகிறதா? வீடு, வீடாக சென்று வருவாய் கோட்டாட்சியர் ஆய்வு.!



கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும்பொருட்டு, தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் அங்கன்வாடிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.


அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளதால் அவர்களது வீடுகளுக்கே சென்று பருப்பு, முட்டை உள்ளிட்ட ஊட்டச்சத்து பொருட்கள் குழந்தைகளின் பெற்றோரிடம் வழங்கப்பட்டு வருகிறது. 

இதனை அங்கன்வாடி பணியாளர்கள் முறையாக வினியோகம் செய்கிறார்களா? என்பதை ஆய்வு செய்யுமாறு வருவாய் கோட்டாட்சியருக்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி உத்தரவிட்டார். அதன்படி, வருவாய் கோட்டாட்சியர் பாலதண்டாயுதபாணி புதுக்கோட்டை நகரில் போஸ் நகர், காமராஜபுரம், மச்சுவாடி, ஜீவா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வீடு, வீடாக சென்று அங்கன்வாடி மையங்களில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரிடம் கேட்டறிந்ததோடு கொடுக்கப்பட்ட ஊட்டச்சத்து பொருட்களையும் வாங்கி தரம் குறித்து ஆய்வு செய்தார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments