"12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு" - தமிழக அரசு
12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு ஜூலை 27ம் தேதி தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019-2020 கல்வியாண்டின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் நடத்தி முடிக்கப்பட்டது.
மார்ச் 24 ஆம் தேதி நடத்தப்பட்ட 12 ஆம் வகுப்பு இறுதி நாள் தேர்வில் சில மாணவர்கள் தேர்வு எழுத முடியாத் சூழ்நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் மற்றும் பெற்றோர் கொரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர் பரிசீலித்து 24 அன்று தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தனியாக வேறொரு நாளில் தேர்வு நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி அந்த தேர்வை வரும் 27 ஆம் தேதி நடத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. மாணவர்கள் அவர்கள்தம் சொந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்படும். இதற்கான ஹால்டிக்கெட்டுகளை GO TO WEBSITE DGE.GOV.IN என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது அவரவர் பள்ளிகளிலோ ஜூலை 13 முதல் ஜூலை 17 வரை பெற்றுக்கொள்ளலாம். தனி தேர்வர்கள் தங்கள் ஹால்டிக்கெட்டுகளை சம்பந்தப்பட்ட தனித்தேர்வு மையங்களில் பெற்றுக்கொள்ளலாம். 

தேர்வு மையங்களுக்கு மாணவர்கள் செல்வதற்காக போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். நோய்கட்டுப்பாட்டு பகுதியில் வசிப்பவர் எவராவது இருப்பின் அவர்கள் தேர்வு மையங்களில் தனி அறையில் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர்

கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments