புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்...புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வயது முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.


 விண்ணப்பதாரர்கள் கடந்த ஜனவரி மாதம் 1-ந் தேதியன்று 58 வயது நிறைவடைந்தவர்களாகவும், அவர்களின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்திற்குள்ளும் இருக்க வேண்டும். உதவித்தொகை பெற விரும்புவோர் அதற்கான விண்ணப்பத்தை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணைய முகவரியில் “ஆவணங்கள் விண்ணப்ப படிவங்கள்” என்ற தலைப்பின்கீழ் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறைவு செய்யப்பெற்ற விண்ணப்பத்துடன் உரிய தாசில்தார் அலுவலகத்தில் இணையம் மூலம் பெறப்பட்ட வருமானச்சான்று, ஆற்றிய தமிழ்ப்பணிகள் பற்றிய விவரம், தமிழறிஞர் 2 பேரிடமிருந்து பெறப்பட்ட தகுதிநிலை சான்று ஆகியவற்றை இணைத்து “தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை-622 005 என்னும் முகவரிக்கு வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனரை நேரிலோ அல்லது 04322 -228840 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments