கொரோனா எதிரொலி: அறந்தாங்கியில் 8 நாள்களுக்கு அனைத்துக் கடைகளையும் மூட முடிவு.! அறந்தாங்கி வர்த்தக சங்கம் அறிவிப்பு.!அறந்தாங்கியில் 8 நாள்களுக்கு அப்பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளையும் மூட வர்த்தக சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.


புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகரில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் விதமாக வருகின்ற 15.7.2020 முதல் 22.7.2020 வரை அறந்தாங்கி நகரில்  மளிகை, ஹோட்டல், காய்கரி கடைகள், பழக்கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட கடைகள் முழுமையான கடையடைப்புடன் கூடிய சுயஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. அனைத்து வர்த்தக நண்பர்களும் இதற்கு 100% சதவிகித ஒத்துழைப்பு வழங்கி கொரனோ தொற்று பரவாமல் இருப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: மருந்தகம் மற்றும் பால் விற்பனை அங்காடிகள் மட்டும் செயல்படும். பால் மட்டும் தனியாக விற்பனை செய்யும் நிறுவனம் மட்டும் இதில் அடங்கும்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments