புதுக்கோட்டை எஸ்.பி-யாக நியமிக்கப்பட்ட பாலாஜி சரவணன் ஐ.பி.எஸ் இன்று பொறுப்பேற்பு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண் சக்தி குமார் மத்திய அரசின் உள்துறை பணிக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார்.


இதனைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி சட்டம்-ஒழுங்கு துணை ஆணையராக இருந்த பாலாஜி சரவணன் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதிய காவல் கண்காணிப்பாளராக  தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.

இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக பாலாஜி சரவணன் இன்று பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.


முன்னதாக அவர் அலுவலகத்திற்கு வந்த போது காவல்துறையினர் காவலர் அணிவகுப்பு நடத்தினர்.அதை அவர் ஏற்றுக் கொண்டார் இதன் பின்னர் அலுவலத்திற்கு சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளராக தனது பொறுப்பை ஏற்றார்.

புதிய காவல் கண்காணிப்பாளராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட பாலாஜி சரவணனுக்கு மாவட்டத்தில் உள்ள துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள் உள்பட பலர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments