மீமிசலில் தொடர்ந்து 2-வது வாரமாக முழு ஊரடங்கு.! கடைகள் அடைப்பு.! வெறிச்சோடிய கடைவீதி.! (படங்கள்)இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.


கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரனோ பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வெறிச்சோடி காணப்படும் கடைவீதி

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், இம்மாதத்தில் அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் மாநிலம் முழுவதும், எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. 

அதன்படி, முதல் ஞாயிறான கடந்த 5-ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. 

இம்மாதத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று தமிழக முழுவதும் , மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கடற்கரை நகரமான  மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று 12.07.2020 தொடர்ந்து 2-வது வாரமாக  பொதுமுடக்கம் காரணமாக  மீமிசல் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் கடைகள் அடைக்கப்பட்டு  வெறிச்சோடி காணப்பட்டது. 
வெறிச்சோடி காணப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

வாகனப் போக்குவரத்தின்றி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பேருந்து நிலையம் அருகில் இருக்கும் மீன் மார்க்கெட் மற்றும் காய்கறி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டு மக்கள் இல்லாத நிலையில் வெறிச்சோடி காணப்பட்டது.
வெறிச்சோடி காணப்படும் பேருந்து நிலையம்

மீமிசல் கடைவீதியில் அத்தியாவசிய தேவைகளான பால் கடைகள், மருந்தகங்கள் மட்டுமே திறந்திருந்தன. காய்கறி கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. 


இதனால் ஊரடங்கு உத்தரவை மதித்து பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே தங்கி இருந்தனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments