ஜூலை 31-ம் தேதி வரை தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை! தமிழக அரசு அறிவிப்பு.!



தமிழகத்தில் வரும் ஜூலை 31 வரை பொது போக்குவரத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக இறப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழக அரசு பொது போக்குவரத்துக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஜூலை 31-ந்தேதி வரை தனியார், அரசு பொது பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படாது என தெரிவித்துள்ளது. முன்னதாக ஜூலை 15ம் தேதி வரை பொதுப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், ஜூலை 31-ந்தேதி வரை போக்குவரத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டது.

கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. மேலும் அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments