கொத்தமங்கலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை மடிக்கணினியில் பதிவேற்றம் செய்து கொடுத்த ஆசிரியர்கள்.!கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் மடிக்கணினிகளில் பாடங்களை ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்து கொடுத்தனர்.


மேலும் மாணவர்கள் பாடங்களை படிக்கும்போது ஏற்படும் சந்தேகங்களை, இதற்கென உருவாக்கப்பட்டுள்ள ‘வாட்ஸ்-அப்’ குழுவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆசிரியர்கள் உடனுக்குடன் பதிலை கூறும் முறையை தொடங்கி உள்ளனர். 

வாரத்தில் ஒரு முறை தேர்வு நடத்தவும், மாணவர்கள் படிக்கிறார்களா என்பதை கண்காணிக்க ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கு செல்வது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது. 

‘வாட்ஸ்-அப்’ வசதியுடன் கூடிய செல்போன் இல்லாத மாணவர்கள், ஆசிரியர்களின் செல்போன் எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments