புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்மாப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உட்பட 42 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி.!புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 172 மேல்நிலைப்பள்ளிகளில் 42 பள்ளிகள் பிளஸ்-2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

மொத்தம் உள்ள அரசு பள்ளிகளில் அம்மாப்பட்டினம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்பனைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, தாந்தனி அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலவயல் அரசு மேல்நிலைப்பள்ளி, சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி, தாஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, பி.அழகாபுரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 8 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன. 

அரசு உதவி பெறும் மற்றும் தனியார், மெட்ரிக், பகுதி நேர உதவி பெறும் பள்ளிகளில் 34 பள்ளிகள் என மொத்தம் 42 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments