புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு.!மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்தது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்று முன்தினம் குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. இதில் ஒரே நாளில் 72 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 இலக்கத்தில் இருந்து 4 இலக்கமாக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 1,016 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 558 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதில் நேற்று மட்டும் 35 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும் 447 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

திருமயம் சந்தைப்பேட்டையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருடைய குடும்பத்தினருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், 4 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 

அவர்களை சுகாதாரத்துறையினர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மேலும் அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

கறம்பக்குடியில் சடையன் தெருவை சேர்ந்த 42 வயது நபர், ஊரணிபுரத்தை சேர்ந்த 50 வயது நபர், புதுப்பட்டியில் 2 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் என 5 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அரிமளம் ஒன்றியம் கே.செட்டிபட்டி ஊராட்சி ஆனைவாரி அருகே உள்ள கானாப்பூர் கிராமத்தை சேர்ந்த 87 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments