புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பெண்கள் பலி.! பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


நோய்த்தொற்று பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மாவட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 45 வயது பெண் மற்றும் புதுக்கோட்டை போஸ் நகரை சேர்ந்த 65 வயது பெண் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். ஏற்கனவே மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 11 பேர் இறந்துள்ளனர். தற்போது மேலும் 2 பேர் இறந்ததை தொடர்ந்து, மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments