புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 21,818 பேருக்கு கொரோனா பரிசோதனை.! கலெக்டர் தகவல்.!



புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 21,818 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 558 பேர் பூரணகுணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்துள்ளார்.


புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி, தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது.

தமிழக முதல்வரின் அறிவுறுத்தலுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 1,016 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 19.07.2020 அன்றைய நிலவரப்படி மாவட்டத்தில் இதுவரை 21,818 பேருக்க கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனா நோய்க் குசிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 1,500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக 500 படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதே போன்று தேவைக்கேற்ப கூடுதல் படுக்கை வசதியை ஏற்படுத்தவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனா நோய் தொற்று பகுதிகள் கண்டறிந்த 37 கட்டுப்பாட்டு மண்டலங்களாக அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதே போன்று வெளிநாடுகளிலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகை புரிந்த நபர்களை தனிமைப்படுத்தும் வகையில் மாத்தூர், திருமயம், கே.புதுப்பட்டி, புதுக்கோட்டை, களமாவூர் உள்ளிட்ட இடங்களில் தனிமைப்படுத்துதல் முகாம்கள் அமைக்கப்பட்டு தற்பொழுது 124 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் 631 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளித்தல், மனநலப் பயிற்சி மற்றும் ஆலோசனைஅளித்தல் போன்ற பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதுடன் அவர்களுக்கு சத்தான உணவு வழங்குவதை உறுதி செய்யவும் அரசு தனிகவனம் செலுத்தி வருகிறது. 

அந்தவகையில் அரசுமருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஒவ்வொரு நாளும் காபி, சிக்கன் சூப், பால், கடலைப்பருப்பு, சுண்டல், சப்பாத்தி, சிக்கன் பிரியாணி, காய்கறி பிரியாணி, நெய் மிளகுபொங்கல், வேகவைத்த பாசிப்பயறு, ரவாமுந்திரி, பொங்கல் போன்ற பல்வேறு வகையான சத்தாண உணவுகள் தரமாக வழங்கப்பட்டு வருகிறது. இதன் பயானாக அரசு மருத்துவமனையின் சிறப்பான சிகிச்சையால் இதுவரை 558 பேர் பூரணகுணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் மாவட்டம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தவும், வணிக நிறுவனங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை கண்காணிக்கவும், வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிப்பதுடன், பொது இடங்களில் பொதுமக்கள் அதிகம் கூடாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் மாவட்டத்தில் நோய் தடுப்புநடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் பி.உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

இந்த ஆய்வுக் கூட்டத்தின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அரசுமருத்துவக்கல்லூரி முதல்வர் அழ.மீனாட்சிசுந்தரம் ,ஊரகநலப்பணிகள் இணைஇயக்குநர் (பொ) மரு.மலர்விழி, பொது சுகாதார துணை இயக்குநர்கள் மரு.அர்ஜுன்குமார், மரு.கலைவாணி, நகராட்சிஆணையர் ஜீவாசுப்பிரமணியன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments