புதுக்கோட்டை மாவட்டத்தில் பரிசோதனை முடிவு வருவதற்குள் வெளியில் செல்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை.! கலெக்டர் அதிரடி.!புதுக்கோட்டை மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் பரிசோதனை முகாம்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக ஒருவருக்கு ஆய்வக பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டால் அந்த நபருடன் தொடர்பில் இருந்த அவரின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தொடர்பிலிருந்த அண்டை, அயலார்களுக்கு கொரோனா பரவி உள்ளதா? என உறுதி செய்திட பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். 

எனவே, ஆய்வக பரிசோதனை மேற்கொண்டு அதற்கான ஆய்வக முடிவு கிடைக்கும் வரை அவர்கள் தம் வீடுகளை விட்டு வெளியில் செல்லாமல் வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். இதன் மூலம் நோய் தொற்று உடையவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க முடியும். 

அவ்வாறு இல்லாமல் எவரேனும் வெளியில் சென்று வருவது தெரியவந்தால் அவர் மீது பொது சுகாதார சட்டத்தின் கீழ் காவல்துறை மூலம் வழக்குபதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments