புதுக்கோட்டை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அடையாள அட்டைகளுக்கான சான்றுகள் பெறலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.
புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சிறப்பு மருத்துவர்களை கொண்டு மருத்துவச் சான்று வழங்கும் முகாம் வாரந்தோறும் திங்கட் கிழமை நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா நோய் தொற்று பராவாமல் தடுப்பதற்காக மருத்துவச் சான்று வழங்கும் முகாம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளும் ஒரே நாளில், ஓர் இடத்தில் வருவதை தவிர்க்கும் பொருட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தில் மருத்துவச் சான்று படிவத்தினை பெற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அல்லது தாங்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட அரசு மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு மருத்துவர்களிடம் மருத்துவச் சான்று பெறலாம்.
பெறபட்ட மருத்துவச் சான்றினை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அனைத்து அரசு வேலை நாட்களிலும் வழங்கி மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையினை பெற்று பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.பி.உமாமகேஸ்வரி,இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!
0 Comments