அன்னவாசல் ஆதரவற்ற சிறுமியின் கல்விச் செலவை ஏற்ற புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம்.!புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சாகுல் ஹமீது வயது (40) இவர் அப்பகுதியில் சம்சா வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.


இந்நிலையில் சாகுல் ஹமீது கடந்த 10 ஆம் தேதி அவரது ஒன்பது வயது மகன் முகமது சாலிக்குடன் சித்தன்னவாசல் பகுதியிலுள்ள மலையடி குளத்திற்கு குளிக்க சென்றபோது இருவரும் நீரில் முழ்கி உயிரிழந்தனர்.

இந்நிலையில் சாகுல் அமீது இறந்ததால் இவரது மகள் முஸ்பானா சாலிஹா(5) தனது படிப்புக்கான கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வந்ததை அறிந்த புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் அவருக்கு உதவ முன்வந்துள்ளது.

இதையடுத்து முஸ்பானா சாலிஹாவின் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிப்பதற்கு தேவையான முழு  கல்வி கட்டணத்தையும் புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் ஏற்றுள்ளது அதற்கான உறுதிமொழி கடிதத்தையும் முஸ்பானா சாலிஹாவின் தாயிடம் புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவர் முகமது இப்ராகிம் வழங்கினார்.

மேலும் அந்த மாணவிக்கு முதற்கட்ட கல்வி  உதவி தொகையையும் வழங்கப்பட்டது.

இந்திகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட சூர்யா நற்பணி இயக்க மாவட்ட செயலாளர் ராஜாமணி மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments