கோபாலப்பட்டிணத்தில் சாய்ந்த நிலையில் மற்றும் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் மின் கம்பங்கள்.!



நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலப்பட்டிணம் அவுலியா நகரில் மின்கம்பங்கள் சாய்ந்த நிலையிலும் மற்றும் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எலும்புக்கூடு போல் காட்சியளிக்கிறது.

அவுலியா நகர் 7-வது வீதியில் முஹம்மது தம்பி அவர்களின் வீட்டருகில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம்..

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 7-வது வீதியில் முஹம்மது தம்பி அவர்களின் வீட்டருகில் உள்ள மின்கம்பம் (https://goo.gl/maps/9HwSmGRQk2Xyod1H7) மற்றும் அதே வீதியில் மற்றோரு மின்கம்பம் (https://goo.gl/maps/2zkY91e6AaCvHeMVA) என இரண்டு மின்கம்பங்கள் சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து எப்பொழுது வேண்டுமானாலும் விழுந்து உயிர் பலி ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. பருவமழை தொடங்க உள்ள நிலையில் பலத்த காற்று வீசினால் மின்கம்பங்கள் முறிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. வீட்டின் அருகே உள்ள இந்த மின்கம்பம் விழுந்தால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்கம்பமானது பழுதடைந்து பல மாதங்களாகிவிட்ட நிலையில் அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்து தர வேண்டி தெரு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவுலியா நகர் 7-வது வீதியில் ஆபத்தனா நிலையில் உள்ள இரண்டாவது மின்கம்பம்...

புதுக்கோட்டை மாவட்டம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கோபாலப்பட்டிணம் அவுலியா நகர் 14-வது வீதியில் (https://goo.gl/maps/9MBPZEvHD5b5c81q9) உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது. வீட்டின் அருகே உள்ள இந்த மின்கம்பம் பலத்த காற்று வீசினால் சாய்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதம் நடைபெறுவதற்கு முன்பு மேற்கண்ட பகுதியில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சரிசெய்து தரும்படி தெரு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவுலியா நகர் 14-வது வீதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம்...

இது பற்றி நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி வாட்ஸ்ஆப் குழுமம் வாயிலாக புகைப்படங்களை பகிர்ந்து அதில் பயணிக்கக்கூடிய ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கவனத்திற்கு அப்பகுதி சமூக ஆர்வம் கொண்ட இளைஞர்கள் அனுப்பி உள்ளனர். இதனடிப்படையில் ஊராட்சி மன்ற நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. 

புகைப்பட உதவி: ரியாஸ் மற்றும் முகம்மது ராவுத்தர்
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a Comment

0 Comments