கொரோனா பாதித்தவர்களிடம் மற்றவர்கள் வெறுப்பு காட்டக்கூடாது.! புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தல்.!புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நடந்தது.


அப்போது அவர் பேசுகையில், கொரோனா பாதித்தவர்களிடம் மற்றவர்கள் வெறுப்புணர்வு காட்டக்கூடாது. அவர்களது குடும்பத்தினர் மற்றும் குணமடைந்து திரும்பியவர்களிடம் பயத்தின் காரணமாக மற்றவர்கள் வெறுப்புணர்வுடன் செயல்படுவதாக புகார்கள் வருகிறது. அவர்கள் மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்” என்றார். 

கூட்டத்தில் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் மரியலூயிஸ் பெக்கிஹோம்ஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல் காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் சண்முகம் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments