கந்தர்வகோட்டை அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கல்லூரி மாணவர் போக்சோ சட்டத்தில் கைது.!புதுக்கோட்டையில் தொடரும் சம்பவமாக மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாள். இது தொடர்பாக போக்சோ சட்டத்தில் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.


புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே நொடியூரில் கடந்த மே மாதம் 13 வயது சிறுமி நரபலி கொடுக்கப்பட்டாள். கடந்த ஜூன் மாதம் அரிமளம் அருகே ஏம்பல் பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் கொலை செய்யப்பட்டாள். இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் மேலும் ஒரு சிறுமி பாதிக்கப்பட்டுள்ளார். அது பற்றிய விவரம் வருமாறு:-

கந்தர்வகோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானாள். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 

பாலியல் தொடர்பான புகார் என்பதால் இது தொடர்பாக புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு விசாரணை நடத்த பரிந்துரை செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்.

போலீசார் விசாரணையில் சிறுமியை, சிறுவன் பாலியல் தொந்தரவு செய்து வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுவனை நேற்று கைது செய்தனர். 

அந்த சிறுவனின் பிறந்தநாள் சான்றிதழில் வயது 17 என உறுதியானதால், அவனை திருச்சியில் உள்ள காப்பகத்தில் அடைக்க ஏற்பாடு செய்தனர். கைதான சிறுவன் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் முதலாமாண்டு படித்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது தொடரும் சம்பவமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோபாலப்பட்டினம், மீமிசல் மற்றும் சுற்றுவட்டார செய்திகளை எங்களது இணையதளத்தில் பதிவிட +918270282723 என்ற எண்ணிற்கு செய்திகளை அனுப்புங்கள்..! மேலும் எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்ஸ்ஆப் மூலம் தெரிந்து கொள்ள உடனே +918270282723 என்ற எண்ணிற்கு SEND என்று மெசேஜ் அனுப்புங்கள்..!

Post a comment

0 Comments